பாகிஸ்தான் உளவாளிக்கு சிவப்பு கம்பளம் விரித்த கேரள அரசு: பாஜக

ஜோதி மல்ஹோத்ராவுடன் கேரள சுற்றுலாத் துறை தொடர்பில் இருந்ததற்கு பாஜக விமர்சனம்...
Kerala CM Pinarayi Vijayan
பினராயி விஜயன்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாகக் கைது செய்யப்பட்ட ஜோதி மல்ஹோத்ராவுக்கு கேரள சுற்றுலாத் துறைக்கு இடையேயான தொடர்பை பாஜக விமர்சித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து, மத்திய அரசு கைது செய்து வருகின்றது. அவர்களில் யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா என்பவரும் அடங்குவார்.

ஜோதி மல்ஹோத்ராவுடன் கேரள அரசுக்கு தொடர்பு

கேரளத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் குறித்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் விளம்பரப்படுத்த கேரள சுற்றுலாத் துறை, ஜோதி மல்ஹோத்ராவை பணியமர்த்தியிருந்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

கடந்த 2024 - 25 காலக்கட்டத்தில், சமூக வலைதளத்தில் பிரபலமாக இருந்த சிலரை பட்டியலிட்டு, அவர்களை கேரளம் அழைத்து வந்து, கேரள சுற்றுலா தலங்களை விளம்பரப்படுத்த பணியமர்த்தியிருக்கிறது. அந்த வகையில் கேரளம் அழைத்து வரப்பட்ட ஜோதி, பல்வேறு இடங்களுக்குச் சென்று விடியோ எடுத்த அதனை அவரது தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது போக்குவரத்து, தங்குமிடம் என அனைத்துச் செலவுகளையும் கேரள அரசே செய்திருக்கிறது.

பாஜக விமர்சனம்

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸை பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா விமர்சித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

”பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா, விஜயன் அரசாங்கத்தின் விருந்தினராக இருந்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பினராயி விஜயன் அரசும் அவரது மருமகனான சுற்றுலா அமைச்சரும் பாகிஸ்தான் உளவாளிக்கு சிவப்பு கம்பளம் விரித்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் பாரத மாதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.

ஹமாஸுக்கு ஆதரவு அளிக்கிறார்கள், பயங்கரவாதிகளைப் புகழ்கிறார்கள், பிஎஃப்ஐ-க்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். சுற்றுலா அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இந்த சம்பவம் நமது தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

The BJP has criticized the Kerala tourism department's connection to Jyoti Malhotra, who was arrested for spying for Pakistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com