பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேசத்தில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டையை அணிந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
பாலஸ்தீன கொடி
பாலஸ்தீன கொடி ஏபி
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி முஹரம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட டி - ஷர்டுகளை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த விடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகிய நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் 4 பேரை நேற்று (ஜூலை 7) காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து அந்த டி - ஷர்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், அவர்கள் 4 பேரின் மீதும் பி.என்.எஸ். 197 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த இளைஞர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Summary

Four youths who participated in a rally in Uttar Pradesh wearing shirts with the Palestinian flag printed on them have been arrested by the state police.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com