
கர்நாடகத்தில் முதல்வர் மாற்றம் குறித்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அம்மாநிலத்தில் முதல்வர் பதவி காலியாக இல்லை, என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைநகர் தில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்கச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடகத்தில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்பட்டு, அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவி உயரக்கூடும் என வெளியான தகவல்கள் பேசுப்பொருளாகின.
இதுகுறித்த, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், 5 ஆண்டுகளும் தானே முதல்வராகத் தொடரப்போவதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசியதாவது:
“முதல்வர் பதவி காலியாக உள்ளதா? நான் உங்கள் முன்புதானே இருக்கின்றேன். கர்நாடகத்தின் முதல்வர் நான்தான். இதைதான், டி.கே. சிவக்குமாரும் கூறினார். அதையே நானும் சொல்கின்றேன். இங்கு பதவி (முதல்வர்) காலியாக இல்லை” என அவர் பேசியுள்ளார்.
முன்னதாக, கர்நாடகத்தில் சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்று ஆதரவளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.