
குல்காமில் அமர்நாத் யாத்திரையில் 3 பேருந்துகள் மோதியதில் 10 பக்தர்கள் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு அமர்நாத் சென்றுகொண்டிருந்த பேருந்துகளில் 3 பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. இந்த சம்பவத்தில் 10 பக்தர்கள் காயமடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தற்போது காயமடைந்த அனைவரின் நிலையும் சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில் விபத்தில் மூன்று பேருந்துகளும் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பேருந்துகளில் இருந்து மற்ற பக்தர்கள் முன்பதிவு பேருந்துகளுக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடர்ந்தது.
காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த அமர்நாத் யாத்திரையானது ஆகஸ்ட் 9 வரை 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
யாத்திரையானது அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.