
பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந்த ஒருவரை துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் கொண்ட குழுவினர் சரமாரியாக சுட்டுக் கொன்றனர்.
பாட்னாவில் உள்ள பராஸ் தனியார் மருத்துவமனையில் சந்தன் என்பவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். வியாழக்கிழமை காலை 5 பேர் கொண்ட கும்பல் குழுவாக மருத்துவமனைக்குள் புகுந்து சந்தனை சரமாரியாக சுட்டனர். இதில் சந்தன் காயமடைந்த சந்தனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சந்தன் பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து பாட்னா காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேய குமார் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். மேலும், அவர் இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள பிகாரில், இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்திருப்பது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதால், எதிர்க்கட்சிகள் நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கத்தை குறிவைத்து வைத்துள்ளன.
பிகாரில் சமீபத்திய காலமாகவே மாநிலம் முழுவதும் நடைபெற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில் பாட்னாவில் தொழிலதிபரும் பாஜக தலைவருமான கோபால் கெம்கா தனது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிகாரில் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும், கடந்த 40 நாள்களில் 70 க்கும் மேற்பட்டோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் உள்ளிட்டோரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.