
ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றவகையில் புதிய இவி பைக் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறப்பம்சங்கள்
அட்வான்ஸ் பேட்டரி டெக்னாலஜி - நீண்ட செயல்திறன் மற்றும் நீடித்த உழைப்புக்கு லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி - மொபைல் போனுடன் இணைத்து கொள்ளும் வகையில் ப்ளூடூத் வசதியுள்ளது.
ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங் - நகருக்குள் வாகனத்தை இயக்கும் போது எனர்ஜி ரெகவரி சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
ரைடிங் மோட்ஸ் - இகோ, சிட்டி, ஸ்போர்ட்ஸ் என மூன்று மோட்கள் உள்ளன.
அதிவேக சார்ஜிங் - நீண்ட தூர பயணத்தில் ஓய்வெடுக்கும் நேரத்திற்குள் அதிவேகமாக சார்ஜிங் செய்யும் வசதியும் உள்ளது.
டாடாவின் புதிய இ-பைக்கின் சிறப்பம்சம் சந்தேகத்திற்கு இடமின்றி ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் திறன் கொண்டது. இது ஆட்டோ மொபைல் சந்தையில் தற்போதுள்ள பல மின்சார இரு சக்கர வாகனங்களைவிட சிறப்பாக செயல்படுகிறது.
சாதாரண சார்ஜிங் தோராயமாக 4-5 மணி நேரத்தில் 0 முதல் 100 சதவிகிதத்தையும், வேகமான சார்ஜிங்கில் சுமார் 1 மணி நேரத்தில் 0 முதல் 80 சதவிகிதத்தையும் எட்டிவிடும்.
விலை என்ன?
பேஸ் மாடல் ரூ.50,000 – 60,000 வரையும், சிட்டி மாடல் ரூ.60,000 – 75,000 வரையும், புரோ மாடல் ரூ.75,000 – 1,00,000 வரையும், ஸ்போர்ட்ஸ் மாடல் ரூ.1,00,000 – 2,00,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பைக் ஓலா எஸ் 1 புரோ, ஏதர் 450 எக்ஸ் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களமிறக்கப்படவுள்ளது.
டாடாவின் இந்தப் புதிய அறிமுகம் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவினாலும், இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.