ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை: முதல்வர் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிரத்தில் ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.
CM Fadnavis
ஃபட்னாவிஸ்
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தில் ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.

தாணே, நாசிக் மற்றும் மும்பைச் செயலகம் ஆகியவற்றில் உள்ள மாநில அதிகாரிகளை குறிவைத்து ஹனிட்ராப் மோசடி நடந்ததாகக் கூறப்படுவது குறித்து பேரவையில் அரசு முறையான அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ நானா படோல் வியாழக்கிழமை கோரிக்கை முன்வைத்தார்.

மேலும் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்புடைய ஆதாரம் பென் டிரைவில் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மழைக்கால கூட்டத்தொடர் முடிவதற்குள் இந்த விவகாரம் குறித்து அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

இந்தநிலையில் இவ்விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பேசிய முதல்வர் ஃபட்னாவிஸ், மாநிலத்தில் ஹனிட்ராப் மூலம் மிரட்டல் வழக்கு எதுவும் வெளிவரவில்லை. நாசிக்கில் பெண் ஒருவர் புகார் அளித்தார், ஆனால் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது. தேனும் இல்லை அல்லது பொறியும் இல்லை என்றார்.

Summary

No case of blackmailing through honeytrap has come to light in the state, Maharashtra Chief Minister Devendra Fadnavis told the legislative assembly on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com