சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 சிறுவர்கள் கைது செய்யப்பட்டதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2025, 7:11 pm IST

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவிய, 5 ஆப்கன் சிறுவர்கள் பெஷிகெல் பகுதியிலுள்ள மசூதியில் நேற்று (ஜூலை 17) தஞ்சமைந்துள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அசிஸ்கெல் மற்றும் மந்திகெல் பகுதிகளுக்குள் ஊடுறுவ முயன்ற, 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்களை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்ததும், அவர்கள் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், கைது செய்யப்பட்ட 5 பேரும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களைத் தற்போது ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஜூலை மாதம் துவங்கியது முதல் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக ஊடுறுவ முயன்ற 30 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம், ஆப்கானிஸ்தானில் இருந்து வடக்கு வசிரிஸ்தான் மாவட்டம் வழியாக பாகிஸ்தானுக்குள் ஊடுறுவ முயன்ற சுமார் 71 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Pakistani security forces have arrested five Afghan children who were members of a suicide squad on the Pakistan-Afghanistan border.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.