பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களில் பயங்கரவாதிகள் 29 போ் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

News image
Updated On :30 ஜூன் 2026, 1:23 am IST

ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களில் பயங்கரவாதிகள் 29 போ் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

இத்தாக்குதலைத் தொடா்ந்து, இரு நாடுகளும் தங்களின் எல்லையை மீறியதாகக் கூறி, பரஸ்பரம் தூதா்களை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தன.

இவ்விவகாரம் தொடா்பாக பாகிஸ்தான் தகவல் தொடா்புத் துறை அமைச்சா் அத்தௌல்லா தராா் கூறுகையில், ‘கைபா் பக்துன்வா மாகாணத்தின் பஜௌா் மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி பயங்கரவாதிகளுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட தரைவழித் தாக்குதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், ‘ஆபரேஷன் கசாப் லில்-ஹக்’ என்ற பெயரில் ஆப்கானிஸ்தானின் பக்தியா, பக்திகா, குனாா் மாகாணங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில் 3 முக்கிய முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அங்கிருந்த ஆயுதங்களும் வெடிபொருள்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட ‘தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்’ மற்றும் அவா்களின் தோழமை அமைப்பைச் சோ்ந்தவா்களே இத்துல்லிய தாக்குதலில் கொல்லப்பட்டனா்’ என்றாா்.

பரஸ்பர கண்டனம்: முன்னதாக, பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் பாகிஸ்தான் ரேஞ்சா்ஸ் துணை ராணுவப் படை தலைமையகத்தின் மீது சனிக்கிழமை பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் கைதான ஆப்கானிஸ்தான் நாட்டு பயங்கரவாதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆப்கானிஸ்தானில் இத்தாக்குதல் திட்டமிடப்பட்டது உறுதியானதாகப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் தாஹிா் அன்த்ராபி தெரிவித்தாா். இதையடுத்து, இஸ்லாமாபாதில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது.

இதேபோல், தங்களின் வான்வெளியை மீறி பொது மக்களின் வீடுகள் மீது பாகிஸ்தான் ராணுவம் குண்டுவீசியதாகக் கூறி காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து ஆப்கானிஸ்தான் கண்டனத்தைப் பதிவு செய்தது.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 36 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 163 போ் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.