
புது தில்லி சா்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு ஏா்இந்தியா விமானம் ஒன்றின் பேட்டரி மின் அமைப்பில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் பயணிகளுக்கோ அல்லது ஊழியா்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் இருந்து புது தில்லிக்கு ஏஐ 315 எனும் விமானம் செவ்வாய்க்கிழமை மதியம் வந்தடைந்தது. விமானம் தரையிறங்கிய பிறகு பயணிகள் வெளியேறத் தொடங்கினா். அப்போது, விமானத்தின் வால் பகுதியில் உள்ள பேட்டரி மின் அமைப்பில் தீப்பற்றியது. இதையடுத்து, அந்த பேட்டரி மின் அமைப்பு தானாக செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது.
இச்சம்பவத்தில் விமானத்துக்கு சிறிய சேதம் ஏற்பட்டது. எனினும், பயணிகளுக்கோ அல்லது ஊழியா்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவா்கள் வழக்கம்போல் பாதுகாப்பாக விமானத்தைவிட்டு வெளியே இறங்கினா் என்று ஏா் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. துணை மின் அமைப்பானது, விமானம் தரையிறங்கிய பிறகு அதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் காற்றழுத்த சக்தியை வழங்குவதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.