
ஜகதீப் தன்கர் உடல்நலம் பெற வாழ்த்துகள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி, ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசு தலைவருக்கு ஜகதீப் தன்கர் திங்கள்கிழமை இரவு கடிதம் அனுப்பினார். மேலும், அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) -ன் படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ராஜிநாமாவை ஏற்க வேண்டும் எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஜகதீப் தன்கரின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முறைப்படி அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜகதீப் தன்கர் உடல் நலனைக் கருத்தில் கொண்டு பதவி விலகியதால், அவர் நலம் பெற வேண்டி பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளில் நமது நாட்டிற்கு சேவை செய்ய ஜகதீப் தன்கருக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க : குடியரசு துணைத் தலைவருக்கான போட்டியில் நிதிஷ்குமார் கட்சி எம்.பி.?!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.