
பிரிட்டன் பயணத்தை முடித்துக் கொண்டு 2 அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவுக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தலைமையில், வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் உடனிருந்தனர்.
பிரதமர் மோடியை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.
அதிபர் முகமது முய்சுவின் அழைப்பின் பேரில், ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் மாலத்தீவின் 60-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணம், பிரதமராக நரேந்திர மோடியின் மூன்றாவது மாலத்தீவு பயணமாகவும், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பதவியேற்ற பிறகு வெளிநாட்டுத் தலைவரின் முதல் பயணமாகவும் இது அமைந்துள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, மாலத்தீவு தலைநகர் மாலேயில் வண்ணமயமான பதாகைகள், சுவரொட்டிகள், தெருக்கள் முழுவதும் இந்திய தேசியக் கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மாலத்தீவில் வசிக்கும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோர் விமான நிலையத்தில் கூடி, இந்திய தேசியக் கொடியை அசைத்து பிரதமரை வரவேற்றனர்.
இதையும் படிக்க | தங்கம் விலை: எவ்வளவு குறைந்தது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.