இந்தியாவில் நீரில் மூழ்கி பலியாகும் குழந்தைகள்! உலகளவில் 18% பெற்ற அவலம்!

நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் உலகளாவிய எண்ணிக்கையில் இந்தியாவில் 18 சதவிகித அளவில் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தகவல்
பிரதிப் படம்
பிரதிப் படம்ENS
Published on
Updated on
1 min read

நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் உலகளாவிய எண்ணிக்கையில் இந்தியாவில் 18 சதவிகித அளவில் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நீரில் மூழ்கி இறப்பவர்கள் குறித்து தன்னார்வத் தொண்டு நிறுவனம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 3 லட்சம் பேர் நீரில் மூழ்கி இறக்கிறார்கள் என்று கூறுகிறது.

அவற்றில் 18 சதவிகித இறப்புகள் இந்தியாவில் நிகழ்வதாகவும், அந்த 18 சதவிகிதத்திலும் 17 சதவிகிதத்துக்கும் அதிகமான இறப்புகள் மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்வதாகவும் ஆய்வு கூறுகிறது.

மேற்கு வங்கத்தில் 1.8 கோடி மக்கள்தொகை உள்ள நிலையில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 9,000-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி இறக்கின்றனர். அதாவது, ஒரு நாளைக்கு சராசரியாக 25 பேர் உயிரிழக்கின்றனர். அவர்களில் பெரும்பாலும் குழந்தைகளாகவே இருப்பதுதான் பெருந்துயரம்.

நான்கு வயது வரையிலான குழந்தைகள், தங்கள் பெற்றோர் வேலையில் ஈடுபடும்போது துரதிருஷ்டவசமாக நீரில் மூழ்கி இறப்பதாகவும், நான்கு முதல் பத்து வயது வரையிலான குழந்தைகள் நீர்நிலைகளில் விளையாடும்போதோ குளிக்கும்போதோ நீந்தும்போதோ மூழ்கி இறக்கின்றனர்.

பெரும்பாலான இறப்புகள் நண்பகல் முதல் பிற்பகல் 2 மணி வரையில் தங்கள் பெற்றோர் வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போதுதான் நிகழ்வதாக ஆய்வு கூறுகிறது.

இவ்வாறான விபத்து உயிரிழப்புகளின் பழிகள், உயிரிழந்தவர்களின் தாய் மீதுதான் சுமத்தப்படுகிறது.

Summary

25 die daily from drowning in West Bengal, half are children: new study finds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com