
ஹிந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்கவே மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
மாநிலங்களவையில் புதன்கிழமை அவர் பேசியதாவது: “ஹிந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்கவே மாட்டார்கள். இதனை இந்த உலகுக்கு பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அழிவின் விளிம்பில் பயங்கரவாதம் இருக்கிறது. அதற்கு முடிவு கட்டப்படும்!” என்றார்.
மேலும் அவர், "காங்கிரஸ் ஆட்சியிலிருந்திருந்தால், அவர்கள் பாகிஸ்தானை அப்பாவி என்று தீர்மானித்து அறிவித்திருப்பார்கள். பயங்கரவாதம் பற்றிய விவகாரங்களில் பாஜகவை கேள்வி கேட்க காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. இன்று, நம் நாட்டுக்கு கிடைத்துள்ள பிரதமர் எதிரிகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளால் எதிர்வினையாற்றும் வல்லமை வாய்ந்தவர்" எனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.