
ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்த பாகிஸ்தானியரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது கடந்த மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதலை மேற்கொண்டது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல் கொடுத்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்த ககன்தீப் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாபின் டான் டரன், மொஹல்லா ரோத்பூர் பகுதியில் வசித்து வரும் ககன்தீப் சிங், பாகிஸ்தானில் காலிஸ்தான் பயங்கரவாதி கோபால் சிங் சாவ்லாவுடன் இணைந்து சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் ககன், பாகிஸ்தான் உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடந்த சமயத்தில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை பாகிஸ்தான் உளவுத் துறைக்கு பகிர்ந்துள்ளார்.
இந்திய உளவுத் துறை அளித்த ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் டான் டரன் பகுதி போலீசாருடன் பஞ்சாப் போலீஸ் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் இந்த பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.