கூட்ட நெரிசலில் பலியான துயரச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்! - டி.கே.சிவக்குமார்

ரசிகர்கள் பலியான துயரச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம் என கர்நாடக துணை முதல்வர் தெரிவித்துள்ளதைப் பற்றி...
டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்
Published on
Updated on
1 min read

ஆர்சிபியின் வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலியான துயரச் சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி கோப்பை வென்றதால், வெற்றிக் கொண்டாட்டங்கள் மற்றும் செய்யப்பட்டு பேருந்து பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, மாலை 5 மணியளவில் கர்நாடக சட்டப் பேரவையிலிருந்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார், ஆளுநர் தலைமையில் சின்னசாமி திடல் வரை அணிவகுப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், ரசிகர்கள் ஆரவரத்தில் ஈடுபட்டு கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கினர்.

இதனால், காவல் துறையினர் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த லேசான தடியடியிலும் ஈடுபட்டனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கியதில் ஒரு பெண் உள்பட 10 பேர் பலியாகியுள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஆளும் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பற்ற தன்மையே இந்த பலிக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சின்னசாமி திடலில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற இருந்த நிலையில் , பெங்களூரு அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கூட்ட நெரிசல் ஏற்படும் என்றுதான் திறந்தவெளி வாகனப் பேரணியை ரத்து செய்தோம்.

5,000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஆர்சிபி வெற்றிப் பேரணி: கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com