சிக்கிம் நிலச்சரிவு: 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேரை மீட்ட விமானப் படை!

சிக்கிமில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து 33 பேர் விமானப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
சிக்கிம் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை இந்திய விமானப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சிக்கிம் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை இந்திய விமானப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.எக்ஸ்/ இந்திய விமானப் படை
Published on
Updated on
1 min read

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த, 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேர், இந்திய விமானப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிக்கிமில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்கு அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் உள்பட பல்வேறு கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

இந்நிலையில், அப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவம், விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகிய படைகள் ஈடுபட்டுள்ளன.

இந்த மீட்புப் பணிகள் குறித்து, இந்திய விமானப் படையின் எக்ஸ் தளப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

“இந்திய விமானப் படையின் எம்.ஐ. 17 ஹெலிகாப்டர்கள் மூலம், சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கியதுடன், தேசிய மீட்புப் படை வீரர்களை அப்பகுதியில் தரையிறக்கி, சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேரை மீட்டுள்ளோம். உயிர்களைக் காப்பாற்றுவதில், இந்திய விமானப் படை தொடர்ந்து உறுதியாகவுள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.

சிக்கிமில் நிலவும் மோசமான வானிலைக்கு இடையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சிக்கியுள்ள உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான உதவிகளை இந்திய ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர்.

நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட லாச்சென் கிராமத்தில் சிக்கியுள்ள 113 சுற்றுலாப் பயணிகளை மீட்க, ராணுவ வீரர்கள் புதிய பாதை ஒன்றை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த 2 நாள்களுக்கு முன்பு லாசங் மற்றும் சங்தாங் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 1,678 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஓய்வுபெற்ற நீதிபதிகளின் நியமனங்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை குலைக்கும்: பி.ஆர். கவாய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com