கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!

கூட்ட நெரிசல் விவகாரத்தில் ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
படம் | ens
படம் | ens
Published on
Updated on
1 min read

வெற்றிப் பேரணிக்கான கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு சின்னசாமி திடலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பெங்களூரு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, ஞாயிற்றுக்கிழமை வேலை இல்லாத நாளில் விழாவை நடத்த போலீசார் அறிவுறுத்தியிருந்த நிலையில் கர்நாடக அரசு அவசர அவசரமாக விழாவுக்கு ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுவும் பலரின் உயிரிழப்புக்கு காரணமாயிருக்கிறது.

பிஎன்எஸ்ஸில் பிரிவு 105, பிரிவு 125(12) (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல்), பிரிவு 142 (சட்டவிரோதமாக கூட்டம் சேர்த்தல்), பிரிவு 121 (குற்றத்தைத் தூண்டுதல்) மற்றும் பிரிவு 190 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கப்பன் பார்க் காவல்துறையினரால் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மத்திய துணை காவல் ஆணையர் சேகர் எச். தேக்கண்ணவரால் உறுதிப்படுத்தப்பட்டு, தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 1.48 லட்சம் பீர் பாக்ஸ்.. ஆர்சிபி வெற்றியால் ஒரேநாளில் உச்சம் தொட்ட மது விற்பனை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com