ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் வெற்றியால் கர்நாடக மாநிலத்தில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று ஒரேநாளில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜூன் 3 ஆம் தேதி நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதிய நிலையில், முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை உச்சி முகர்ந்தது.
18 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஆர்சிபி கோப்பையை வென்றதால், ரசிகர்கள் ஆரவாரத்தில் திளைத்தனர். பெங்களூரு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட தீபாவளி போலவே கொண்டாட்டப்பட்டது. இதனை கொண்டாடும்விதமாக ரசிகர்கள் பலர் பல்வேறு மதுவகைகளை வாங்கி அருந்தியுள்ளனர்.
ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்ற ஜூன் 3 ஆம் தேதி மட்டும் 1.48 லட்சம் பீர் பாட்டில் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டு, அதன்மூலம் ரூ.30.66 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் 36 ஆயிரம் பெட்டிகள் விற்கப்பட்டதைவிட இது கணிசமாக உயர்ந்திருக்கிறது.
பீர் வகைகளைத் தவிர்த்து 1.28 லட்சம் பெட்டிகள் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.127 கோடி கிடைத்துள்ளது. கடந்தாண்டு இதே நாளில் வெறும் ரூ.19.21 கோடிக்கும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது.
ஒட்டுமொத்தமாக, அந்த ஒரே நாளில் மது விற்பனை மூலம் கர்நாடக மாநில அரசுக்கு ரூ.157.94 கோடி வருவாய் கிட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் நாளில் வசூலான ரூ.25 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ.132.24 கோடி அதிகமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



