
இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 2011 - 12 ஆம் ஆண்டில் 344.47 மில்லியன் மக்கள் கடும் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022 - 23 ஆம் ஆண்டில் 75.24 மில்லியனாக குறைந்தது. 2011 - 12 ஆம் ஆண்டில் 27.1 சதவிகிதம் என்ற நிலையிலிருந்து, 2022 - 23 ஆம் ஆண்டில் 5.3 சதவிகிதமாகக் குறைந்தது.
சுமார் 11 ஆண்டுகளில் 269 மில்லியன் மக்கள் கடும் வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
கடந்த 11 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் கடும் வறுமை 18.4 சதவிகிதத்திலிருந்து 2.8 சதவிகிதமாகவும், நகர்ப்புறங்களில் கடும் வறுமை 10.7 சதவிகிதத்திலிருந்து 1.1 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.
உலக வங்கியின் கணக்கெடுப்பின்படி, தினசரி நுகர்வானது மூன்று டாலருக்கும் குறைவாக இருப்பதை வறுமைக் கோட்டுக்குக்கீழ் (2021 ஆம் ஆண்டில்) வகைப்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.