இதற்கு பதிலளிக்கும் வகையில் மகாராஷ்டிர தலைமை தோ்தல் அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதலில் வரைவு வாக்காளா் பட்டியல் தரவுகளும், அடுத்து இறுதி வாக்காளா் பட்டியல் தரவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 2009, 2014, 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. எந்தவொரு நபரும் உரிய கட்டணத்தைச் செலுத்தி மாவட்ட தோ்தல் அதிகாரியிடமிருந்து வாக்காளா் பட்டியல் விவரங்களைப் பெற முடியும்’ என்று குறிப்பிடப்பட்டது.