
ஜம்மு- காஷ்மீரில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் குறித்து, அவ்வழியாகச் செல்லும் விமானத்தில் பயணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
உலகிலேயே மிக உயரமான பாலங்களில் ஒன்றாக மாறியிருக்கும் செனாப் ரயில் பாலத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
இது தற்போது, அவ்வழியாக விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் புகைப்பட ஆசையை அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க.. சட்டப்படி, கையில் ரொக்கமாக எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?
இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விமானிகள், விமானப் பயணத்தின்போது பொறியியல் துறை சாதனைச் சின்னமாக விளங்கும் செனாப் ரயில் பாலத்தை விமானம் கடக்கவிருப்பது குறித்து பயணிகளுக்கு அறிவிப்புகளை வெளியிடுவதாகவும், பயணிகள் பலரும், விமானத்தில்இருந்தபடியே செனாப் ரயில் பாலத்தைப் புகைப்படம் எடுக்க அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அனைத்துக் கோணங்களிலிருந்தும் செனாப் ரயில் பாலமானது பாராட்டுகளைக் குவிக்கிறது, பூமியிலிருந்து எழும் பாராட்டு மழையானது, மேகங்களில் பட்டு எதிரொலிக்கிறது என்று இந்திய ரயில்வேயின் தகவல் மற்றும் விளம்பரத் துறை செயல் இயக்குநர் திலீப் குமார் கூறியிருக்கிறார்.
இதையும் படிக்க.. பின்கோடுகளுக்கும் முடிவுரையா? வந்துவிட்டது டிஜிபின்!
தற்போது, ஜம்மு - காஷ்மீரைக் கடந்து செல்லும் அனைத்து விமானங்களும், செனாப் ரயில் பாலத்தைக் கடக்கும்போது ஒரு சிறந்த அனுபவத்தைப் பெறுகிறது. விமானிகளுக்கான அறையிலிருந்து, ஒரு குரல் ஒலிக்கிறது. அது செனாப் ரயில் பாலத்தை நெருங்குகிறோம் என்ற விமானிகளின் குரல்தான். உங்களுக்குக் கீழே, உலகின் மிக உயரமான ரயில் வளைவு பாலமான செனாப் பாலம் அமைந்திருக்கிறது என்றும் அதில் விளக்கம் கொடுக்கப்படுகிறது. உடனடியாக மக்கள் தங்களது ஜன்னல் வழியாக செனாப் பாலத்தைப் பார்க்கவும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ஆர்வம் காட்டுவதையும் பார்க்க முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.