
அஞ்சல் துறையால் உருவாக்கப்பட்ட அஞ்சல் குறியீடு எனப்படும் பின்கோடுகளுக்கு முடிவுரை எழுதும் வகையில் டிஜி பின் (DIGIPIN) என்ற டிஜிட்டல் அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டன.
இந்தியாவில் 10 இலக்க எண்களுடன், 4 மீ. x 4மீ. பரப்பளவுக்கு குறிப்பிட்ட ஒரு இடத்தை, வழக்கமான பின்கோடுகளைப் போல அல்லாமல், துல்லியமாக அறிய உதவும் வகையில் இந்த டிஜிபின் செயல்படுகிறது.
ஒரு முகவரியை மிகவும் எளிமையாக்கும் வகையில், இந்திய அஞ்சல் துறையுடன், ஐஐடி-ஹைதராபாத் மற்றும் இஸ்ரோ இணைந்து, இந்த டிஜிபின் முறையை உருவாக்கியுள்ளன.
உங்களுக்கும் ஒரு டிஜிபின் வேண்டும் என்றால், இந்திய அஞ்சல் துறையின் இணையதளம் வாயிலாகவே அதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
கூகுள் மேப்ஸ், லைவ் ஷேர், பின் கோடு என அனைத்துமே, ஒருவரது முகவரியைக் கண்டுபிடிக்க போதுமான உதவியை செய்வதில்லை. ஆனால், இந்த டிஜிபின் என்பது, ஒரு முகவரியை துல்லியமாகக் காட்டும் 10 இலக்க எண்ணாகும். யார் வேண்டுமானாலும் தங்களது முகவரிக்கு இந்த 10 இலக்கை எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதையும் படிக்க.. சட்டப்படி, கையில் ரொக்கமாக எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?
ஒரு முகவரியை எளிதாகக் கண்டறியும் வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர், முழு முகவரியையும் கொடுப்பதற்கு பதிலாக, இந்த பத்து இலக்க எண்ணை மட்டும் கொடுக்கலாம்.
இந்த 10 இலக்க எண்ணை மட்டும் கூகுள் மேப் போன்ற வரைபடத்தில் போட்டு தேடினால், சரியான முகவரி கிடைத்து விடும்.
இந்தியாவில் டிஜி பின் போல, உலகம் முழுவதுக்கும் கூகுள் பிளஸ் கோட்ஸ் முறையை பின்பற்றி வருகிறது. டிஜி பின் என்பது இந்தியாவுக்கு மட்டுமானது. இது நாடு முழுவதுக்கும் பயன்பாட்டுக்கு வர 2027 வரை ஆகலாம் என கருதப்படுகிறது.
ஒரு முகவரியை உள்ளிட்டால், அது தானாகவே டிஜிபின் உருவாக்கிக்கொடுக்கும். ஒரு டிஜி பின்னை மாற்ற முடியாது. டிஜிபின் உருவாக்கத்தில் தனிநபரின் தலையீடு எதுவும் இருக்க முடியாது.
இதையும் படிக்க.. செனாப் ரயில் பாலம் குறித்து விமானத்தில் அறிவிப்பு! அப்புறம் என்ன?
ஒரு கட்டடத்துக்கான அடையாளமாக மட்டுமே இது இருக்கும், ஒரு கட்டடத்துக்குள் இருக்கும் பல்வேறு வீடுகள், அலுவலகங்களுக்குத்தனித்தனியாக டிஜிபின் பெற முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.