வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் இல்லம் தாக்குதல்! விசாரணைக் குழு அமைப்பு!

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதைப் பற்றி...
ரவீந்திரநாத் தாகூர்
ரவீந்திரநாத் தாகூர்
Published on
Updated on
1 min read

வங்கதேச நாட்டிலுள்ள நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள, நோபல் பரிசுப்பெற்ற வங்காள மொழி எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம் தற்போது அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடந்த ஜூன் 8 ஆம் தேதியன்று, அந்த அருங்காட்சியகத்துக்கு, ஒரு நபர் தனது குடும்பத்துடன் பார்வையிட சென்றுள்ளார். அப்போது, வாகன நிறுத்துமிடத்தில் வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பாக அந்நபருக்கும், அங்குப் பணிப்புரியும் ஊழியருக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த நபர் அங்குள்ள அலுவலக அறையில் அடைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் அருங்காட்சியக நிர்வாகிகளுக்கு எதிராக, கடந்த ஜூன் 10 ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டமானது வன்முறையாக மாறி, ஒரு கும்பல் அருங்காட்சியகத்தின் அரங்கத்தை அடித்து நொறுக்கியதுடன், அதன் இயக்குநரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள, 3 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்து, 5 நாள்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அந்த அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஷாஸாத்பூர் பகுதியில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் தாகூர் குடும்பத்தின் பூர்வீக இல்லம் மற்றும் வருவாய் அலுவலகமாகும். இத்துடன், அங்குதான் ரவீந்திரநாத் தாகூர், தனது பல முக்கிய இலக்கிய படைப்புகளை எழுதியதாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிகினி ஆடைகளுக்கு தடை! ஆண்களுக்கும் மேலாடை கட்டாயம் - எங்கே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com