ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தேனிலவு கொலை: மனைவி உள்பட 5 பேருக்கு போலீஸ் காவல்!

தேனிலவு கொலை வழக்கில் கைதான 5 பேருக்கும் போலீஸ் காவல்...

News image
நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் சோனம் ரகுவன்ஷி.- PTI
Updated On :11 ஜூன் 2025, 1:54 pm

DIN

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவி, அவரது காதலன் உள்பட 5 பேருக்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர் திருமணமாகி 10 நாள்களில் மேகாலயாவுக்கு தேனிலவுக்குச் சென்றனர்.

அப்போது, சோனம் தனது காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் கூலிப்படையுடன் இணைந்து ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜ் குஷ்வாஹாவின் ஏற்பாட்டில், மேகாலயாவுக்குச் சென்ற கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேர் ராஜ் குஷ்வாஹாவை கொலை செய்துள்ளனர். சம்பவத்தின்போது சோனமும் உடன் இருந்துள்ளார்.

சோனம் ரகுவன்ஷியை உத்தர பிரதேசத்திலும் அவரது காதலர் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்தவர்களை மத்திய பிரதேசத்திலும் மேகாலயா போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் அப்பகுதியின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, முறையான அனுமதியுடன் மேகாலயாவுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், 5 பேரையும் இன்று மாலை ஷில்லாங் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மேகாலயா காவல்துறையினர் 8 நாள்கள் நீதிமன்றக் காவலில் எடுத்துள்ளனர்.

அவர்கள் அனைவரிடமும் மேகாலயா போலீசார் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெறவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.