
ஆமதாபாத் விமான நிலையத்தில் தற்காலிகமாக சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காக இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று பிற்பகல் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 242 பயணிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 133 பயணிகள் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, ஆமதாபாத் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
“விமான விபத்து நடந்த பகுதிக்கு மேற்கு ரயில்வேவின் பேரிடர் மீட்புக் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ரயில்வேவின் மருத்துவக் குழுவும் ரயில்வே காவலர்களும் மீட்புப் பணிக்காக சென்றுள்ளனர்.
தற்போது ஆமதாபாத்தில் இருந்து தில்லி மற்றும் மும்பைக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் ரயில்கள் ஆமதாபாத்தில் இருந்து இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.