Ahmedabad plane crash
விபத்துக்குள்ளான விமானம்...X

குஜராத்தில் பயணிகள் விமானம் விழுந்தது! 240 பேரின் கதி என்ன?

குஜராத்தில் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது பற்றி...
Published on

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI171 (போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்தது) புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்ததாக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளது. இதனால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விமான விபத்து நடந்த இடத்தில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.

தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆமதாபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

ஆமதாபாத் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பயணித்தவர்களின் நிலை குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்துக்குள் சிக்கிய முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி

விபத்தில் சிக்கிய விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன் செல்லும் விமானம் என்பதால், வெளிநாட்டு பயணிகளும் விபத்தில் சிக்கியிருக்கலாம் என பதற்றம் நிலவியுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு

தகவலை அடுத்து 90 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை குழு ஆமதாபாத் விரைந்துள்ளது.

அமித்ஷா அவசர ஆலோசனை

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லண்டன் செல்லும் விமான என்பதால் விமானத்தில் முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டிருந்ததால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே, மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆமதாபாத் விரைந்துள்ளார்.

பிரதமர் மோடி, இந்த விமான விபத்து தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோருடன் பேசியுள்ளார்.

தற்போது வரை 130 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன, பலரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிர் பிழைத்தவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் அமித் ஷா , மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஆகியோர் ஆமதாபாத் விரைந்துள்ளனர்.

இதையும் படிக்க: குஜராத் விமான விபத்து: கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? - செய்திகள் நேரலை...

இதையும் படிக்க: மருத்துவ மாணவர் விடுதி மீது விழுந்த விமானம்! மருத்துவர்களின் நிலை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com