தில்லியில் இருந்து ஆமதாபாத் விமான நிலையத்துக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடி, விபத்து ஏற்பட்ட பகுதியில் நடைபெறும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து, ஆமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு சென்ற அவர், விபத்தில் காயமடைந்தவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் படிக்க...
ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டும் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆமதாபாத் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களின் வசதிக்காக தில்லி, மும்பையில் இருந்து ஆமதாபாத்துக்கு சிறப்பு விமானம் இயக்கவுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது முதல் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது வரை பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் முழு மருத்துவச் செலவையும் டாடா குழுமமே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இன்று பகல் 1.43 மணிக்கு நேரிட்ட விமான விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்திருப்பதாக, ஆமதாபாத் காவல் ஆணையர் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், கடுமையாக சேதமடைந்த விடுதியில் இருந்த ஐந்து மருத்துவ மாணவர்கள் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க
விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஆமதாபாத் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
காயமடைந்தவர்கள் அங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள நிலையில் நிலவரம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து வருகிறார்.
விமானப் போக்குவரத்துத் துறைகளால் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அவசரகால அழைப்பாக இந்த மே டே கால் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மே டே கால் என்பது பிரெஞ்சு மொழியிலிருந்து அதாவது மெய்டர் என்றால் உதவி செய்யுங்கள் என்று அர்த்தமாகும். இந்த மெய்டர் என்ற வார்த்தைதான் மே டே கால் என உலகம் முழுவதும் அவசர உதவிக்கான அழைப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
குஜராத்தின் ஆமதாபாதில் நடந்தது மனதை உடைக்கும் பேரழிவு என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதிலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்தவர் ஒருவர் வெளியிட்டிருக்கும் விடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் படிக்க
ஆமதாபாத் விமான நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் படிக்க
குஜராத்தின் ஆமதாபாதில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
ஆமதாபாத் விமான விபத்து மீட்புப் பணிகளில் அரசுடன் இணைந்து உதவிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆமதாபாத் விமான விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனையைத் தருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சோகமான நேரத்தில் எனது நினைவுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
குஜராத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. விமானம் விழுந்தபோது, கட்டடமும் தீப்பற்றி எரிந்ததாகவும், இதனால், அதில் இருந்த மருத்துவர்களின் நிலை குறித்து குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். மேலும் படிக்க
ஆமதாபாத் விமான நிலையத்தில் தற்காலிகமாக சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காக இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தற்போது ஆமதாபாதில் இருந்து தில்லி மற்றும் மும்பைக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் ரயில்கள் ஆமதாபாத்தில் இருந்து இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் இன்று பகல் 1.43 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும் படிக்க
ஏர் இந்தியா விமானத்தை இயக்கியவர் அனுபவம் வாய்ந்த விமானி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தை இயக்கிய விமானி சுமித் சபர்வால் 8,200 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் என்றும், துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் படிக்க
குஜராத் மாநிலம் ஆமதாபாதில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 50 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதுவரை 130 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட உடல்கள் கருகிய நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க
ஆமதாபாதில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 61 வெளிநாட்டவர்கள் பயணம் செய்ததாக விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்தியர்கள் 169 பேர் , பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 53 பேர், போர்த்துகீசிய நாட்டினர் 7 பேர், கனடாவைச் சேர்ந்த ஒருவர் பயணம். மேலும் படிக்க
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இன்று பகல் பிற்பகல் 1.40 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், கடந்த 11.5 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
ஆமதாபாதில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சம்பவத்தில் சிக்கியதாக பதிவிட்ட விமான நிர்வாகம், தற்போது விபத்தில் சிக்கியதாக உறுதி செய்துள்ளது. மேலும் படிக்க
விபத்தில் சிக்கிய விமானத்தில் 7 குழந்தைகள் பயணித்ததாகவும், அதில் இரண்டு கைக்குழந்தைகள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படிக்க...
ஆமதாபாதில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதனை சம்பவம் எனக் குறிப்பிட்டு ஏர் இந்தியா நிர்வாகம் பதிவிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
குஜராத் மாநிலம் ஆமதாபாதில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 30 பேர் பலியாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடம், குடியிருப்புப் பகுதி என்பதால், அங்கிருந்த கட்டடங்களிலும் தீப்பற்றி எரிந்தது.
விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் படிக்க
குஜராத் விமான விபத்தில் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில், விமானத்திலிருந்து மதியம் 1.39 மணிக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க...
விபத்துக்குள்ளான விமானத்தில் காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், மருத்துவக்குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், ஆமதாபாத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
240 பேரின் கதி என்ன?
ஆமதாபாதில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் பயணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரியாக 242 பேர் விமானத்தில் பயணித்ததாக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.