
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதனை சம்பவம் எனக் குறிப்பிட்டு ஏர் இந்தியா நிர்வாகம் பதிவிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் பயணித்த 242 பேரின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், விபத்து குறித்து ஏர் இந்தியா நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா நிர்வாகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“ஆமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் இன்று, ஜூன் 12, 2025 அன்று ஒரு சம்பவத்தில் சிக்கியுள்ளது. இதனை நாங்கள் உறுதி செய்கிறோம். கூடுதல் தகவல்களை ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது எக்ஸ் தளத்தில் விரைவில் பகிர்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
விமானம் விழுந்த சம்பவத்தை விபத்து எனக் குறிப்பிடாமல், தாக்குதலுக்கு உள்ளானது போல் சம்பவம் எனக் குறிப்பிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால். விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு ’மே டே’ எனக் கூறப்படும் அவசர தகவலை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.