குஜராத் விமான விபத்தில் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.
குஜராத் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்தது) புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்ததாக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளது. மீட்புப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விமான பயணிகளில் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து பற்றி குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமான விபத்துக்குள்ளான சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். காயமடைந்த பயணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் உடனடி சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.
காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல போதிய ஏற்பாடுகளைச் செய்யவும் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்னிடம் பேசினார். முழு ஒத்துழைப்பை அளிப்பதாக உறுதி கூறியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | குஜராத்தில் பயணிகள் விமானம் விழுந்தது! 240 பேரின் கதி என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உத்தரகண்டில் நீா்மின் திட்ட சுரங்க விபத்து: உயிரிழப்பு 7-ஆக அதிகரிப்பு - 3 போ் மாயம்

குஜராத் மழை வெள்ளம்: 2 நாள்களில் 35 போ் உயிரிழப்பு

குஜராத்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 போ் உயிரிழப்பு; 6 போ் காயம்!

குஜராத் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பையே எட்டாத பாதிக்குப் பாதி மாணவர்கள்!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



