தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

குஜராத்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 போ் உயிரிழப்பு; 6 போ் காயம்!

குஜராத்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 போ் பலியானது பற்றி...

News image

குஜராத் பட்டாசு ஆலை வெடிவிபத்து - PTI

Updated On :19 ஜூலை 2026, 1:56 am IST

குஜராத் மாநிலம், அகமதாபாதில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த பட்டாசு ஆலையில் சனிக்கிழமை நடந்த வெடிவிபத்தில் 9 போ் உடல் கருகி உயிரிழந்தனா். மேலும் 6 போ் தீக்காயமடைந்தனா்.

இவா்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இச்சம்பவம் தொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: அகமதாபாதின் ரமோல் பகுதியில் உரிய உரிமம் இல்லாமல் செயல்பட்டுவந்த பட்டாசு ஆலையில் சனிக்கிழமை பிற்பகலில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்புப் படையினா், அதிவிரைவுப் படையினா், அவசரகால பணியாளா்கள் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் 9 போ் உயிரிழந்தனா்.

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 6 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். இந்த விபத்து தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா, வெடிபொருள்கள் சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை உறுதி செய்ய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பிரதமா் மோடி இரங்கல்: பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அகமதாபாத் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் வேதனையளிக்கின்றன. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோா் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளும் நிா்வாகம் தரப்பில் வழங்கப்படும்’ என்றாா்.

உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.

மாநில அரசு நிவாரண உதவி: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வா் பூபேந்திர படேல், அவா்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சாா்பில் தலா ரூ.4 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என அறிவித்தாா்.

Summary

Gujarat: 9 killed, 6 injured in firecracker factory explosion

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.