குஜராத் மாநிலத்தில் படிக்கும் பாதிக்குப் பாதி மாணவர்கள் 12 ஆம் வகுப்பையே முடிப்பதில்லை என்று கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை (UDISE) அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
2025 - 26 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் 53,425 பள்ளிகளில் 1.15 கோடி மாணவர்கள் சேர்க்கப்பட்ட போதிலும், 12 ஆம் வகுப்பு வரை 54.5 சதவிகித மாணவர்கள் மட்டுமே நீடிக்கின்றனர். 45.5 சதவிகித மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வரை படிக்காமல் வெளியேறுகின்றனர்.
அதிலும் குறிப்பாக, 12 ஆம் வகுப்பு வரை நீடிக்கும் 54.5 சதவிகித மாணவர்களில் 53 சதவிகிதம் ஆண்களாகவும் 56.2 சதவிகிதம் பெண்களாகவும் உள்ளனர்.
தொடக்க நிலைக் கல்வியில் 100 சதவிகிதம் மாணவர்கள் சேர்க்கப்பட்டாலும் இடைநிலைக் கல்வியில் அது 90.4 சதவிகிதமாக மாறி மேல்நிலைக் கல்வி என்று வரும்போது, மிகவும் கடுமையாக சரிகிறது.
மாணவர் சேர்க்கையே இல்லாத 58 பள்ளிகள் உள்ளன. அங்கு 74 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மேலும், ஒரு ஆசிரியர் கொண்ட 2,335 பள்ளிகள் உள்ளன. அங்கு 80,053 மாணவர்கள் பயில்கின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
A report by the Unified District Information System for Education (UDISE) has revealed that half of the students studying in Gujarat do not complete Class 12.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









