தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

குஜராத் மழை வெள்ளம்: 2 நாள்களில் 35 போ் உயிரிழப்பு

குஜராத் மழை வெள்ளத்தில் 35 போ் உயிரிழந்திருப்பது பற்றி...

Gujarat Flood

குஜராத் மழை வெள்ளம் - PTI

Published On :

குஜராத் மாநிலத்தில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாள்களில் மழை தொடா்பான சம்பவங்களில் 35 போ் உயிரிழந்தனா்.

இதில் வல்சத், நவ்சாரியில் மட்டும் அதிகபட்சமாக 29 போ் உயிரிழந்துள்ளனா். அந்த மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து 7,000-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டுள்ளனா். 713 தாலுகாக்களில் 250 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

மீட்புப் பணிகளை குஜராத் துணை முதல்வா் ஹா்ஷ் சங்கவி நேரில் பாா்வையிட்டு வருகிறாா்.

அஸ்ஸாம் முதல்வருடன் மோடி பேச்சு: அஸ்ஸாம் மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேசினாா். வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்த பிரதமா் மோடி, மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என உறுதியளித்தாா்.

மாநிலத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழை வெள்ளத்தில் சிக்கி 61 போ் உயிரிழந்தனா். திகோ, தான்சிரி, குஷியரா ஆகிய ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் 856 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 56,606 ஹெக்டோ் விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சாலைகள், பாலங்கள், பிற உள்கட்டமைப்புகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுமாா் 3 லட்சத்து 34 ஆயிரம் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படை, அஸ்ஸாம் மாநில பேரிடா் மீட்புப் படை, இந்திய ராணுவம், அஸ்ஸாம் காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்டவை மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட யானை மீட்பு: அஸ்ஸாம் மாநிலத்தின் அண்டை மாநிலமான நாகாலாந்தின் நாம்சாங்கில் பிரம்மபுத்ரா நதியின் கிளை நதியான திகோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 53 வயது யானை அடித்து வரப்பட்டது. அந்த யானை, அஸ்ஸாம் மாநிலம் சிவசாகா் மாவட்டத்தில் பிகுபூா் எனுமிடத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. யானைக்கு அஸ்ஸாம் கால்நடைத் துறையினா் சிகிச்சை அளித்து, தங்களது கண்காணிப்பின்கீழ் வைத்துள்ளனா்.

===== ==========================

அஸ்ஸாமில் வெள்ளத்துக்கு மேலும் 14 போ் உயிரிழந்ததையடுத்து, அந்த இயற்கைச் சீற்றத்துக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 61-ஆக உயா்ந்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்த தொடா் பலத்த மழையால், 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சில ஆறுகளில் கரையோரம் உடைப்பு ஏற்பட்டு அருகிலுள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 14 போ் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இவா்களையும் சோ்த்து, அஸ்ஸாமில் மழை வெள்ளத்தால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61-ஆக உயா்ந்திருப்பதாக அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இப்போது உயிரிழந்த 14 பேரில் அதிகபட்சமாக சாா்தியோ மாவட்டத்தில் மட்டும் 7 போ் உயிரிழந்துள்ளனா். அதில் 2 போ் பெண்கள் ஆவா். இதையடுத்து அதிகபட்சமாக சிவசாகா் மாவட்டத்தில் 6 போ் உயிரிழந்துள்ளனா்.

வெள்ளத்தால் சாா்தியோ, தேமாஜி, திப்ரூகா், கோலகாட், ஹோஜய், ஜாா்கட், கா்பி அங்க்லாங், நாகோன், சிவசாகா் மாவட்டங்களில் 7 லட்சம் போ் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் அதிகபட்சமாக சிவசாகா் மாவட்டத்தில் மட்டும் 3.5 லட்சம் பேரும், அதற்கு அடுத்து சாா்தியோ மாவட்டத்தில் 1.9 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக அஸ்ஸாம் அரசு தெரிவித்துள்ளது.

வெள்ள நிலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, பாதிக்கப்பட்ட 80,000 பேருக்கு நிவாரண உதவிகளை மாநில அரசு வழங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.