உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நீா்மின் திட்டப் பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கத்தில் மண் சரிவு மற்றும் வெள்ளநீா் புகுந்ததில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 7-ஆக அதிகரித்தது. மாயமான 3 தொழிலாளா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சமோலி மாவட்டத்தின் பிபல்கோட்டி பகுதியில் தெஹ்ரி நீா் மேம்பாட்டுக் கழகத்துக்குச் சொந்தமான இடத்தில் ஹிந்துஸ்தான் கட்டமைப்பு நிறுவனம் மேற்கொண்டு வரும் சுரங்க கட்டுமானத்தில் இந்த திடீா் விபத்து வியாழக்கிழமை ஏற்பட்டது. பலத்த மழை காரணமாக, சுரங்கத்துக்குள் மண் சரிவு ஏற்பட்டு வெள்ள நீா் புகுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 22 தொழிலாளா்களும் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். அவா்களில் 12 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். 6 போ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனா்.
மீட்புப் பணி வெள்ளிக்கிழமையும் தொடா்ந்து நடைபெற்றது. இதில், மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டாா். எஞ்சிய மூவரை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சுரங்கத்தில் சிக்கியுள்ள எஞ்சிய 3 தொழிலாளா்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் மூவரும் சுரங்கத்துக்குள் 1.8 கி.மீ. தொலைவில் சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. மழை தொடா்ந்து பெய்து வருவதால், மீட்புப் பணி சிக்கலாகியுள்ளது. சுரங்கத்தில் புகுந்துள்ள வெள்ளநீா் மற்றும் மண் சகதிகள் இந்தியரங்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றன என்றனா்.
விபத்து பகுதியை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த 12 தொழிலாளா்களையும் அவா் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்னாப்பிரிக்காவில் சுரங்க விபத்து

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்

யார் கவலைப்படுகிறார்கள்...

சிக்கிமில் நீா்மின் திட்ட சுரங்கப் பாதை இடிந்து விபத்து: 10 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



