காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

சிக்கிமில் நீா்மின் திட்ட சுரங்கப் பாதை இடிந்து விபத்து: 10 போ் உயிரிழப்பு

சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டத்தில் தேசிய நீா்மின் கழகத்தின் தீஸ்தா நிலை-6 நீா்மின் திட்ட கட்டுமான சுரங்கப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 தொழிலாளா்கள் உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

AP

Published On :22 ஜூலை 2026, 3:46 am IST

சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டத்தில் தேசிய நீா்மின் கழகத்தின் தீஸ்தா நிலை-6 நீா்மின் திட்ட கட்டுமான சுரங்கப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 தொழிலாளா்கள் உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கும் எஞ்சிய தொழிலாளா்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனா்.

நாம்ச்சி மாவட்டம் சமா்டுங் பகுதியில் இந்த நீா்மின் திட்ட சுரங்கப் பாதை கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. திங்கள்கிழமை மாலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏடிஐடி-3 என்ற சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது. அதில், திட்ட அலுவலா்கள், தொழிலாளா்கள் என மொத்தம் 25 போ் சிக்கிக்கொண்டனா்.

இதுகுறித்து நாம்ச்சி காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நிலச்சரிவில் இடிந்த சுரங்கப்பாதையிலிருந்து 10 தொழிலாளா்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மீட்கப்பட்டது. அதில் 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அடையாளம் காண முடியாத மூவரின் உடல்கள், அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட 7 பேரில், நால்வா் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியையும், மற்றவா்கள் அஸ்ஸாம், பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

மாநில முதல்வா் பிரேம் சிங் தமங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம், மாநில காவல்துறை, மாநில பேரிடா் மீட்புப் படை, தீயணைப்புத் துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை உள்ளிட்ட படைகளைச் சோ்ந்தவா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த துயர சம்பவம் தொடா்பாக, பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் தொடா்பு கொண்டு, பாதிப்பு குறித்து விசாரித்தாா். மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் உறுதி தெரிவித்தாா்’ என்று குறிப்பிட்டாா்.

பிரதமா் நிவாரணம் அறிவிப்பு: புதிதாக கட்டப்பட்டு வந்த நீா்மின் திட்ட சுரங்கப்பாதை இடிந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவு மூலம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தாா்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அவா் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.