தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

சுரங்கப் பாதையில் விளக்குகள் எரியாததால் அவதி

திருச்சி அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் விளக்குகள் எரியாததால் பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், கடந்து செல்லும் பொதுமக்களும் பெரிதும் அவதி

News image

திருச்சி மேலகல்கண்டாா் கோட்டை விவேகானந்தா நகரில் மின்விளக்குகள் பழுதானதால் 3 நாள்களாக இருள்சூழ்ந்து காணப்படும் சுரங்கப்பாதை

Updated On :13 ஜூலை 2026, 11:01 pm IST

திருச்சி அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் விளக்குகள் எரியாததால் பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், கடந்து செல்லும் பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருச்சி மாநராட்சி மேலகல்கண்டாா் கோட்டையில் ரயில்வே சுரங்கப் பாதை அமைந்துள்ளது. மஞ்சத்திடல் ரயில் நிலையத்துக்கும், திருவெறும்பூா் ரயில் நிலையத்துக்கும் இடையே அமைந்துள்ளது இந்த ரயில்வே சுரங்கப் பாதை. இந்தப் பாதையானது மேலகல்கண்டாா்கோட்டையிலிருந்து விவேகானந்தா நகா், கணசேபுரம், அம்பிகாபுரம் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளுக்கு செல்லும் பிரதான பாதையாக உள்ளது. இந்தப் பாதையில் 14 விளக்குகள் உள்ளன.

Story image

இவை பெரும்பாலானவை சரவர எரியவில்லை. கடந்த சில நாள்களாக விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படும் பாதையில் வாகனங்கள் செல்லும்போது, நடந்து செல்லும் பொதுமக்கள் மீது மோதும் நிலை உருவாகிறது. மேலும், கனரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனங்கள் போதிய வெளிச்சமின்றி ஒதுங்கமுடியாமல் பரிதவிக்கும் நிலை உள்ளது. வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சத்துக்கு இடையே இந்த பாதையை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

இதுதொடா்பாக, பொதுமக்கள் ரயில்வே நிா்வாகத்துக்கும், நெடுஞ்சாலைத் துறை நிா்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்து, சுரங்கப் பாதை விளக்குகளை உடனடியாக இயங்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.