ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்பிழைத்த ஒருவர்!

குஜராத் மாநிலத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் ஒருவர் உயிர்பிழைத்ததாகத் தகவல்.
உயிர் பிழைப்பு
உயிர் பிழைப்பு
Published on
Updated on
1 min read

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இன்று பகல் 1.43 மணிக்கு நேரிட்ட விமான விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்திருப்பதாக, ஆமதாபாத் காவல் ஆணையர் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா 171 விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த 242 பேரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்பட்ட நிலையில், இதுவரை 204 உடல்கள் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தின் 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த விஸ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் உயிர் பிழைத்திருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவரின் அதிர்ச்சிப் பதிவு!

விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், விமானம் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து கருகிய நிலையில் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்ததாக ஏர் இந்தியா தெரிவித்திருந்தது.

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 169 பேர் இந்தியர்கள் என்றும், 53 பேர் பிரிட்டீஷ் நாட்டவர் என்றும், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர், ஏழு பேர் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

உயிர் பிழைத்த பிஸ்வாஸ் யார்?

உயிர் பிழைத்த பிஸ்வாஸ், லண்டனில் வாழ்ந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கழித்துவிட்டு, லண்டன் திரும்பும் போது அவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

இதையும் படிக்க.. விமானியிடமிருந்து வந்த அவசர அழைப்பு, ஆனால் பேசவில்லை! மே டே கால் என்றால்?

பிஸ்வாஸ் குமார், பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்பதும், அவரது குடும்பத்தினர் இந்தியாவில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பிஸ்வாஸ் குமார் கண் மற்றும் மார்பு, கால்களில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சகோதரரைக் காணவில்லை

விமான விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமாரின் சகோதரரும், இந்த விமானத்தில் பயணித்ததாகவும், அவரைக் காணவில்லை என்றும் விஸ்வாஸ் கூறியதாகக் கூறப்படுகிறது. இவர் 20 ஆண்டுகளாக மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிரிட்டனில் வாழ்ந்து வருவதாகவும் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com