
ஆந்திரத்தில் பள்ளி மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது.
ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் தலைமையில் கூட்டணி ஆட்சி இருந்து வருகிறது. முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது.
ஆந்திரத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இந்த புதிய திட்டத்தின்கீழ், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.15,000 செலுத்தப்படும். இதன் மூலம் 67 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இதற்காக ரூ. 8,745 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் இதில் பயன் பெறலாம் என்று கூறியுள்ள ஆந்திர அரசு, அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு, தனியார் பள்ளிகளில் பயில வேண்டும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், 75% பள்ளி வருகைப் பதிவு இருக்க வேண்டும் உள்ளிட்ட ஒரு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
மேலும், வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதிமுதல் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டமும் அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.