நான் முதல்வன் திட்டம்: யுபிஎஸ்சி தேர்வில் மாணவர்கள் சாதனை! - முதல்வர் பெருமிதம்

'நான் முதல்வன்' திட்டத்தில் பயின்று யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.
MK stalin
மு.க. ஸ்டாலின்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயின்ற மாணவ, மாணவிகள் பலரும் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய 2025 ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தோ்வு கடந்த மே 25-ஆம் தேதி நடைபெற்றது. 979 பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வின் முடிவுகள் நேற்று(புதன்கிழமை) வெளியாகியுள்ளன. முதல்நிலைத் தேர்வில் 14,161 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சியடைந்தவா்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தோ்வு ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. இதற்காக தோ்வா்கள் விரிவான விண்ணப்பத்தை ஜூன் 16 முதல் 25-ஆம் தேதிக்குள் தோ்வாணய வலைதளத்தில் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பின்னர் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் பயின்ற மாணவ, மாணவிகள் பலரும் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுபற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் 'நான் முதல்வன்' திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் யுபிஎஸ்சி முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர்!

முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன்.

இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்! தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com