ஆமதாபாத் விமான விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனையைத் தருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ171 விபத்துக்குள்ளானது. இதில் 168 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் என 242 பேர் பயணித்துள்ளனர்.
விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளதால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 130 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரமான விபத்து என்பதால் உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமனாத்தில் பயணித்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | விமான விபத்து: குஜராத் விரைகிறார் அமித் ஷா!
இந்நிலையில் பிரதமர் மோடி விபத்து பற்றி எக்ஸ் பக்கத்தில், "ஆமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. இந்த விபத்து, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அளிக்கிறது.
இந்த சோகமான நேரத்தில் எனது நினைவுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், விபத்து வலி மிகுந்ததாக குறிப்பிட்டுள்ளார். குஜராத் முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மீட்புப்பணி குறித்து பேசியுள்ளதாகவும் மீட்புப் பணியை விரைவு படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஸ்ரீ ராம்மோகன் நாயுடு ஆகியோருடன் தொலைபேசியில் பேசியதுடன் அவர்கள் ஆமதாபாத் செல்ல உத்தரவிட்டார். அதன்படி அமைச்சர்கள் இருவரும் ஆமதாபாத் சென்றுள்ளனர்.
இதையும் படிக்க | குஜராத்தில் பயணிகள் விமானம் விழுந்தது! 240 பேரின் கதி என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி

சத்தீஸ்கரில் தனியார் விமானம் விபத்து!

நொய்டாவில் சர்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


