
அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 242 பேரில் 241 பேரும் பலியாக, ஒரே ஒருவர் உயிர் பிழைத்தார்.
நிச்சயம், ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்து, அதில் பலியானவர்களை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அனைவருக்குமே, ஒரே ஒருவர் உயிர் பிழைத்தார் என்ற தகவல் நிச்சயம் ஆச்சரியத்தை அளித்திருக்கும்.
விமானம் வெறுமனே, தரையில் விழுந்திருந்தால் பரவாயில்லை, அது விழுந்த வேகத்தில், அதில் இருந்த எரிபொருளால் வெடித்து மிகப்பெரிய தீப்பிழம்பைக் கக்கியதைப் பார்த்தவர்கள், இப்படி ஒரு விபத்தில் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதிய நிலையிலும், ஒருவர் அதுவும் எழுந்து ஓடிக் கொண்டிருந்தார் என்றால் நம்பத்தான் முடியவில்லை. நடந்திருக்கிறது.
விமானம் வேகமாகக் குலுங்குகிறது. விமானிகளின் நடுங்கும் குரல் கேட்கிறது, அனைத்தும் மங்குகிறது. எங்கும் புகை சூழ்ந்துகொண்டு விமானம் உடைந்து நொறுங்குகிறது. அப்புறம் எதுவும் தெரியவில்லை என்பதே விஸ்வாஸ் குமார் தனது உறவினரிடம் கூறியிருக்கிறார்.
இதையும் படிக்க.. மனைவி அஸ்தியைக் கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலி! லண்டனில் தவிக்கும் மகள்கள்!
உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் அமர்ந்திருந்தது 11ஏ இருக்கை என்பதுதான். இது எப்போதும் அதிர்ஷ்டமான இருக்கை என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கிறது. அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
போயிங் 787 டிரீம்லைனர் விமானத்தின் உயர்தர வகுப்புக்கு அடுத்த ஜன்னலுக்கு அருகே அமைந்திருக்கும். இது மற்ற இருக்கைகளைவிட சற்று இடைவெளி அதிகமாக இருக்கும், அவசர கதவுக்கு மிக அருகில் இருக்கும் இருக்கை. மேலும், இது விமானத்தின் இறக்கைப் பகுதிக்கு அருகே இருக்கும். அதாவது, விமானத்துடன் இறக்கைப் பகுதி ஒட்டப்பட்டிருக்கும் இடம். எனவே, இது விமானத்தின் மிகவும் பலமான பகுதியாகவும் அமைந்திருக்குமாம்.
பெரும்பாலானோர், இதுபோன்ற காரணங்களால்தான், அவசர காலங்களில் இந்த 11ஏ இருக்கையில் அமர்ந்திருப்பவர் மட்டும் வெகு விரைவாக விமானத்திலிருந்து தப்புவதாக நம்புகிறார்கள். அதாவது அவசர வெளியேற்றத்துக்கான கதவுக்கு அருகே அமர்ந்திருப்பதே, இந்த 11ஏ இருக்கை அதிர்ஷ்டமான இருக்கையாக தொடர்ந்து நீடிக்கிறது என்றும், தப்பிக்க வேண்டும் என்று நினைக்காவிட்டால் கூட, இந்த கதவுக்கு அருகே வருபவர்களால், இவர் வேகமாக வெளியேற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. கடைசி செல்ஃபி! லண்டன் கனவுடன் புறப்பட்ட மருத்துவ தம்பதியின் கதை...
விமானத்தில் பாதுகாப்பான இருக்கை என்று உள்ளதா?
நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், அவசர கதவுக்கு அருகில் இருக்கும் 5 வரிசைகளுக்குள் இருக்கும் இருக்கைகள் பாதுகாப்பானவை. ஏதேனும் அவசரம் என்றால், இந்த இருக்கையில் இருப்பவர்கள் வேகமாக வெளியேற முடியும் என்பதே காரணம். ஆனால், சில நிபுணர்களோ, விமானத்தின் பின்பகுதியில் இருக்கும் நடு இருக்கைகள்தான் பாதுகாப்பானவையாக இருந்திருப்பதாக கடந்த கால விபத்துகள் மூலம் அறிந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
ஆனால் உண்மையில் உயிர் பிழைப்பது என்பது விமான விபத்து நிகழ்வதைப் பொறுத்துத்தானே தவிர, இருக்கை அல்ல என்பதுதான் பொதுவான கருத்தாக உள்ளது.
எனவே, விமானத்தைப் பொருத்தவரை எந்தவொரு தனி இருக்கையும் பாதுகாப்பானது அல்ல என்பதுதான் முடிவு.
இந்த விபத்தைப் பொருத்தவரை, 11ஏ இருக்கை இருந்த இறக்கைப் பகுதி பலமாக இருந்ததால், அது சேதமடையாமல், உடைந்திருக்கிறது. அதன் வழியே அவர் வெளியே குதித்திருக்கிறார். அதனால் அவர் உயிர் பிழைத்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.