மனைவி அஸ்தியைக் கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலி! லண்டனில் தவிக்கும் மகள்கள்!

மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா வந்த அர்ஜுன் விமான விபத்தில் பலியான சம்பவம்
பாரதி பென் - அர்ஜுன்
பாரதி பென் - அர்ஜுன்
Published on
Updated on
1 min read

மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார்.

மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றிவிட்டு லண்டன் திரும்பும்போது ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கி அவரும் பலியான நிலையில் அவரது இரண்டு மகள்களும் தந்தை வருவார் என லண்டனில் காத்திருக்கிறார்கள். தாயை ஒரு வாரத்துக்கு முன்பு இழந்து, தந்தையையும் நேற்று இழந்த நிலையில், யார் அவர்களுக்கு ஆறுதல் சொல்வார்கள் என்பது தெரியவில்லை.

லண்டனில், அர்ஜூன் தனது மனைவி பாரதிபென் மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த நிலையில், ஏழு நாள்களுக்கு முன்புதான் பாரதி பென் உயிரிழந்துள்ளார். சிகிச்சையில் இருந்து வந்த பாரதி பென், தான் உயிரிழந்துவிட்டால், எனது அஸ்தியை இந்தியாவில் உள்ள சொந்த ஊருக்குக் கொண்டு சென்று அங்குள்ள ஆற்றில் கரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்க.. விமானத்தில் அதிர்ஷ்டமான இருக்கையாக 11ஏ மீண்டும் நிரூபணம்! ஏன்? எப்படி?

அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற பாரதி பென் அஸ்தியுடன் இந்தியா வந்து, உள்ளூர் ஆற்றில் கரைத்துவிட்டு, இந்தியாவிலிருந்து லண்டன் திரும்ப ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய அர்ஜூன், அகமதாபாத் விமான விபத்தில் பலியான 241 பயணிகளில் ஒருவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அர்ஜூனுக்கு 8 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள் இருந்த நிலையில், தாயின் அஸ்தியைக் கொண்டு சென்ற தந்தையும் விமான விபத்தில் பலியாக, பெற்றோரை இழந்து லண்டனில் தவிக்கும் மகள்களின் நிலை பற்றி அறியும் யார் ஒருவருக்கும் மனம் கலங்கத்தான் செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com