
ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான எல்ஐசி காப்பீட்டுக் கோரிக்கைகளை சிக்கலின்றி எளிதாக முடித்துக் கொடுக்க எல்ஐசி முன்வந்துள்ளது.
காப்பீடுகளுக்கான கோரிக்களை மிக எளிதாக, எவ்வித விதிமுறைகளையும் கடுமையாகப் பின்பற்றாமல், அவர்களது கோரிக்கை நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்று எல்ஐசி அறிவித்துள்ளது.
இதையும் படிக்க.. விமானத்தில் அதிர்ஷ்டமான இருக்கையாக 11ஏ மீண்டும் நிரூபணம்! ஏன்? எப்படி?
விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு உதவ முன் வந்திருப்பதாகவும், பலியானவர்களின் எல்ஐசி காப்பீடுகளுக்கான தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து காப்பீட்டு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில், எல்ஐசி பாலிசிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை பெறுவதில் இருக்கும் வழக்கமான நடைமுறைகள் தளர்த்தப்படும். இறப்புச் சான்றிதழ் அல்லது அதற்கு மாறாக, அரசு கொடுக்கும் இறப்பை உறுதி செய்யும் எந்த ஆவணமும் அல்லது மத்திய, மாநில அரசு அல்லது விமான நிறுவனம் அளிக்கும் நிவாரண உதவிக்கான ஆவணங்களையே இறப்புக்கான சான்றிதழாக ஏற்றுக்கொண்டு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு 022 - 68276827 என்னும் கைபேசி எண்ணை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.