விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி குடும்பத்தினரைச் சந்தித்த பிரதமர் மோடி

அகமதாபாத்தில் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.
PM Modi meets family members of ex-Gujarat CM Vijay Rupani
விஜய் ரூபானி குடும்பத்தினருடன் பிரதமர் மோடி.
Published on
Updated on
1 min read

அகமதாபாத்தில் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.

அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை வெள்ளிக்கிழமை காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். அப்போது மீட்புப் பணிகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பின்னர் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு சென்ற மோடி, சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

தொடர்ந்து விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரையும் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், விஜய் ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். அவர் நம்மிடையே இல்லை என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. நான் அவரை பல தசாப்தங்களாக அறிவேன்.

மிகவும் சவாலான சில காலகட்டங்களில் நாங்கள் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றினோம். அவர், பணிவானவராகவும், கடின உழைப்பாளியாகவும், கட்சியின் சித்தாந்தத்தில் உறுதியாகவும் இருந்தார். பதவிகளில் உயர்ந்து, அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, குஜராத்தின் முதல்வராக விடாமுயற்சியுடன் பணியாற்றினார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் விமான விபத்து! குபேரா முன்வெளியீடு ஒத்திவைப்பு!

அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்தில் சென்ற அவர் துரதிர்ஷ்டவசமாக விமான விபத்தில் பலியானார்.

மியான்மரில் 1956, ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் பிறந்த விஜய் ரூபானி, 1996 - 97 ராஜ்கோட் மேயராகவும், 2006 -12 வரையில் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2016 - 2021 வரையில் குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பாஜகவின் மூத்தத் தலைவரான ரூபானி, குஜராத் போக்குவரத்து, தொழிலாளர் மற்றும் நீர்வழங்கல் துறைகளிலும் அமைச்சராக பதவி வகித்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com