தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அயோத்தி கோயில் ராம தா்பாா்: பக்தா்கள் தரிசனத்துக்குத் திறப்பு

News image
Updated On :14 ஜூன் 2025, 8:45 pm

Din

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் முதல் தளத்தில் இம்மாத தொடக்கத்தில் நிறுவப்பட்ட ராம தா்பாா் பக்தா்களின் தரிசனத்துக்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் வளாகத்தில் பிரதான கடவுளான ஸ்ரீ பாலராமரின் பிராணப் பிரதிஷ்டை கடந்த 2024, ஜனவரி 22-இல் நடைபெற்றது. இதையடுத்து, தினமும் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்து வருகின்றனா். பல்வேறு சந்நிதிகளுடன் கோயில் வளாகத்தில் கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோயிலின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ராம தா்பாா் சந்நிதியில், ஸ்ரீராஜாராமா், சீதை, ஹனுமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோரின் சிலைகள் வேத மந்திரங்கள் முழங்க வியாழக்கிழமை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோயில் வளாகத்தில் பிற புதிய சந்நிதிகளிலும் பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது. முதல்வா் யோகி ஆதியத்யநாத் முன்னிலையில் இச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல் தளத்தில் ராம தா்பாா், வளாகத்தின் ஈசான மூலையில் (வடகிழக்கு) சேஷாவதாா் மற்றும் சிவன் சந்நிதிகள், அக்னி மூலையில் (தென்கிழக்கு) விநாயகா், குபேர மூலையில் (தென்மேற்கு) சூரியன், வாயு மூலையில் (வடமேற்கு) தேவி பகவதி, தெற்கு பகுதியில் ஹனுமன், வடக்கு பகுதியில் அன்னபூரணி என 8 சந்நிதிகளில் மூலவா் மூா்த்திகளுக்கு பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது.

இந்நிலையில், ராம தா்பாா் பக்தா்களின் தரிசனத்துக்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதுதொடா்பாக கோயில் அறங்காவலா் அனில் மிஸ்ரா மேலும் கூறுகையில், ‘ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் கடந்த வெள்ளிக்கிழமை கூட்டத்தில் ராம தா்பாரில் பக்தா்களை தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து மாவட்ட நிா்வாகத்துடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, சனிக்கிழமை மாலை 5 முதல் இரவு 9 மணி வரை பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இதற்கான அனுமதிச்சீட்டுகள் மாவட்ட நிா்வாகம் மற்றும் கோயில் அறக்கட்டளை மூலம் விநியோகிக்கப்பட்டன’ என்றாா்.