பிரதமர் நரேந்திர மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க நான்கு நாள் பயணமாக நாளை கனடா, சைப்ரஸ், குரோஷியா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கியது ஜி-7 அமைப்பு. கனடாவில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும் சைப்ரஸ் மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கும் சென்று இரு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உள்ளார்.
நடப்பாண்டிற்கான ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு கனடாவில் வரும் 15 முதல் 17 வரை நடைபெறுகிறது. ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் கனடா பிரதமர் மார்க் கார்கினிய் அழைப்பின்பேரில் மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸின் அழைப்பின்பேரில் மோடி முதன்முதலாக சைபரஸுக்குச் செல்வார். கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு சைப்ரஸுக்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹூக்ளி நதியில் பிரதமர் மோடி படகுப் பயணம்

ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: மோடி

சென்னையில் மோடி நாளை ஆலோசனை: அண்ணாமலைக்கு கட்டாய அழைப்பு?
கனமழையால் பிரதமரின் கோக்ரஜார் பயணம் ரத்து!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


