அசாம் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பிற்பகல் குவாஹாட்டி வந்தடைந்தார்.
குவாஹாட்டி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சார்மா, அவரது அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து, கோக்ரஜார் மாவட்டத்தில் ரூ. 4,570 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவிருந்தார். ஆனால், கனமழையின் காரணமாக கோக்ராஜார் செல்லும் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோக்ரஜார் பகுதிக்காக அறிவிக்கப்பட்ட, ரூ. 4,570 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் மோடி தற்போது குவாஹாட்டிலிருந்தபடியே காணொலி வாயிலாகத் தொடங்கி வைப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, இன்று மாலை குவாஹாட்டியில் ரூ. 19,680 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் இம்மாநிலத்திற்கு மேற்கொள்ளும் நான்காவது வருகை இதுவாகும். இன்று இரவு குவாஹாட்டியில் தங்கி, சனிக்கிழமை அன்று சில்சார் நகருக்குச் சென்று, சுமார் ரூ. 23,550 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
நிகழாண்டில் அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Summary
Prime Minister Narendra Modi arrived in Guwahati on Friday afternoon on a two-day visit to Assam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹூக்ளி நதியில் பிரதமர் மோடி படகுப் பயணம்

ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!
வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறி! தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பை ரத்து செய்த பிரதமர் மோடி!!
மார்ச் 31-ல் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி! ரூ.5,295 கோடி வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


