அசாமின் கோக்ரஜார் மாவட்டத்திற்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
இரண்டு நாள் பயணமாக அசாம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிற்பகல் குவாஹாட்டி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அவரை ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சார்மா, அவரது அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் அன்பாக வரவேற்றனர்.
கனமழை காரணமாக கோக்ரஜார் பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குவாஹாட்டியிலிருந்து காணொலி வாயிலாக ரூ. 4,570 கோடிக்கும் அதிகமான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
அசாமில், காமாக்யா-சர்லபள்ளி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், குவாஹாட்டி-புதிய ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் மற்றும் நாரங்கி-அகர்தலா எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று முக்கிய ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
ரயில்வே பராமரிப்புப் பணிகளை வலுப்படுத்தவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், அம்மாவட்டத்தின் பாஷ்பாரியில் அமையவுள்ள முழுமையான சீரமைப்புப் பணிமனை ஒன்றிற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
முக்கியமான சாலை உள்கட்டமைப்புத் திட்டமான அசாம் மாலா 3.0-க்கான பூமி பூஜை நிகழ்விலும் பிரதமர் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.
மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் கிராமப்புறச் சாலைகளுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தவும், இத்திட்டத்தின் கீழ் 900 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், போடோலாந்து பிராந்திய கவுன்சில் பகுதியில் சுமார் ரூ. 1,100 கோடி முதலீட்டில் உருவாக்கப்படவுள்ள நான்கு மேம்பாலங்கள் மற்றும் இரண்டு பாலங்களுக்கான பூமி பூஜை நிகழ்விலும் அவர் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.
இத்திட்டங்கள் கோக்ரஜார் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், இணைப்பு வசதிகள், சுற்றுலா, விவசாயப் போக்குவரத்து வசதிகள், சுகாதாரச் சேவைகள் மற்றும் கிராமப்புறப் பயண வசதிகளை மேம்படுத்தவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
Summary
Prime Minister Narendra Modi virtually unveiled projects worth over Rs 4,570 crore in Assam's Kokrajhar district on Friday, ahead of the assembly elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்

3 நாடுகளுக்கு பயணம்! பிரதமர் மோடி புறப்பட்டார்!

54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி!

ஜோத்பூர் விமான நிலையத்தில் புதிய முனையம்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி




