
தில்லியில் 2 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!
தில்லியில் ரூ.33,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

தில்லியில் ரூ.33,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். - படம்: ANI
புது தில்லியில் 2 புதிய மெட்ரோ வழித்தடங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
தில்லியில் ரூ.33,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 8) தொடக்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, சரோஜனி நகரில் பொதுக் குடியிருப்புத் திட்டத்தில், பெண் பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை பிரதமர் மோடி வழங்கினார்.

சரோஜனி நகரில் பொதுக் குடியிருப்புத் திட்டத்தில், பெண் பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை வழங்கிய பிரதமர் மோடி. - படம்: ANI
இதைத் தொடர்ந்து, 12.3 கி.மீ. நீளமுள்ள மஜ்லிஸ் பார்க்-மௌஜ்பூர்-பாபர்பூர் (இளஞ்சிவப்பு) மெட்ரோ வழித்தடத்தையும், 9.9 கி.மீ. நீளமுள்ள தீபாலி சௌக்-மஜ்லிஸ்-பார்க் (மெஜந்தா) மெட்ரோ வழித்தடத்தையும் மோடி தொடக்கி வைத்தார்.
புராரி, ஜகத்பூர்-வஜீராபாத், காஜூரி காஸ், பஜன்புரா, யமுனை விஹார் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு தில்லி பகுதிகளுக்கு இந்த மஜ்லிஸ் பார்க்-மௌஜ்பூர்-பாபர்பூர் வழித்தடம் சிறந்த இணைப்பை ஏற்படுத்தும்.
அதேபோல், தீபாலி சௌக்-மஜ்லிஸ்-பார்க் உயர்நிலை மெட்ரோ வழித்தடம் மதுபன் சௌக், உத்தர் பீதம்புரா-பிரசாந்த் விஹார், ஹைதர்பூர் பட்லி மோர், பாலாஸ்வா உள்ளிட்ட பகுதிகளுக்கு மெட்ரோ இணைப்பை மேம்படுத்தும்.
மெட்ரோ விரிவாக்கத்துக்கு அடிக்கல்: மெட்ரோ விரிவாக்கம் பகுதி 5-ஏ திட்டத்தில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ராமகிருஷ்ணா ஆசிரம் மார்க்-இந்திரபிரஸ்தா, ஏரோசிட்டி-இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் முனையம்-1 மற்றும் துக்ளகாபாத்-கலிந்தி குஞ்ஜ் ஆகிய வழித்தடங்கள் இதில் அடங்கும்.
இவை மத்திய தில்லி, தெற்கு தில்லி, நொய்டா மற்றும் விமான நிலையம் ஆகியவற்றுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்தும்.
Summary
Prime Minister Narendra Modi inaugurated development projects worth Rs 33,500 crore in Delhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






