மேலும் 5 புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!

புதிதாக 5 அம்ரித் பாரத் ரயில்கள் இன்றுமுதல் இயக்கப்படுகின்றன...
மேலும் 5 புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!
PTI
Updated on
1 min read

5 புதிய அம்ரித் பாரத் ரயில்கள் இன்றுமுதல் இயக்கப்படுகின்றன. அஸ்ஸாமில் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 18) நடைபெற்ற புதிய அம்ரித் பாரத் ரயில்கள் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ரயில்களை காணொலி வழியாக கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

திப்ரூகர் - கோமதிநகர்

காமக்யா - ரோஹ்தக்

கொல்கத்தா (ஹௌரா) - ஆனந்த் விஹார்

கொல்கத்தா (சியால்டா) - பனாரஸ்

கொல்கத்தா (சந்திரகாச்சி) - தாம்பரம் ஆகிய வழித்தடங்களில் 4 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.

முன்னதாக சனிக்கிழமை(ஜன. 17),

அலிபூர்துவார் - எஸ்எம்விடி பெங்களூரு

அலிபூர்துவார் - மும்பை (பன்வேல்)

நியூ ஜல்பைகுரி - நாகர்கோவில்

நியூ ஜல்பைகுரி - திருச்சி ஆகிய வழித்தடங்களில் 4 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்திருந்த நிலையில், நாட்டில் இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

Summary

5 new Amrit Bharat Express

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com